யானை போல மெதுவாகச் செயல்படும் தமிழக அரசு!


tamilnadu government functions like an elephant says court மதுரை: தமிழக அரசு யானை போல மெதுவாகச் செயல்படுதவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பிடு வழங்கக்கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கெனவே இரண்டு முறை விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வந்தது, இந்த முறையும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் ஏதும் தாக்கல் செய்யவில்லை என்றும் பதில் அறிக்கை இன்னும் தயாராகி வருவதாகவும் கூறினார்.
cropped-sitting-elephant
இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், “இவ்வளவு காலதாமதமா? அரசு யானை போல மெதுவாகச் செயல்படுகிறது.” என்று கடுமையாக கண்டித்தனர். தொடர்ந்து, டிசம்பர் 13ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் இதுவே இறுதியான அவகாசம் என்றும் அறிவுறுத்தினர்.

0 Response to "யானை போல மெதுவாகச் செயல்படும் தமிழக அரசு! "

Post a Comment

Thanks for your valuable feedback.... We will review wait 1 to 2 week 🙏✅

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel